Home Featured இந்தியா இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் 30,000 ஐஎஸ் ஆதரவாளர்கள்!

இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் 30,000 ஐஎஸ் ஆதரவாளர்கள்!

592
0
SHARE
Ad

isisபுது டெல்லி – ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும், அதில் இணைந்து போரிடவும் 30,000 பேர் தயாராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஐஎஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் மட்டும் 30,000 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த இயக்கத்தில் இணைந்து சொந்த (இந்தியா) நாட்டிற்கு எதிராக போரிடவும் தயாராகி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளும் முதல்கட்டமாக தங்களது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு இந்தியாவில் சைபர் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த முயற்சியை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice