Home Featured வணிகம் புதிய ஐ-போன் மற்றும் ஐ-பேட் ஏர் மார்ச் 15இல் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய ஐ-போன் மற்றும் ஐ-பேட் ஏர் மார்ச் 15இல் அறிமுகப்படுத்தப்படும்.

618
0
SHARE
Ad

நியூயார்க் – திறன்பேசி தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் 5 எஸ்இ (5 se) மற்றும் ஐ-பேட் ஏர் எனப்படும் அதி நவீன தட்டைக் கணினி ஆகிய கருவிகள் எதிர்வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

4 அங்குல குறுக்களவுள்ள புதிய ரக ஐபோன்கள், இணையத் தளங்களின் வழியும், ஆப்பிள் விற்பனை மையங்களின் வழியும் மார்ச் 18ஆம் தேதி முதல் கிடைக்கும்.

இருப்பினும், புதிய ரகக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு பதிவு செய்யப்படும், நடைமுறை செயல்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

iphone-5seஐபோன் 5எஸ்இ என்பது, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 5எஸ் ரக திறன்பேசிகளின் மேம்படுத்தப்பட்ட ரகம் என்பதோடு, அவற்றில் ஐபோன் 6-க்கான திறன் அம்சங்களும் இணைந்திருக்கும். ஐபோன் 6இல் இருப்பது போன்றே, 8 மெகாபிக்சல் புகைப்பட வசதியும் இந்த புதிய 5 எஸ்இ ரக திறன்பேசிகளில் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆப்பிள் பே எனப்படும் ஆப்பிள் சாதனங்களின் வழி கட்டணம் செலுத்துவதற்கான வசதிகள், வைஃபை எனப்படும் கட்டற்ற இணையத் தொடர்பை விரைவாக ஏற்படுத்திக் கொள்ளும் வசதிகளையும் இந்த புதிய ஐபோன் கொண்டிருக்கும்.

மேலும், வடிவமைப்பிலும் சில புதுமைகளையும், முனைகளின் ஓரங்களில் வளைந்த கண்ணாடி போன்ற அமைப்பையும் இந்த ஐபோன் 5எஸ்இ கொண்டிருக்கும்.

அதேபோன்று, புதிய ஐபேட் ஏர்-3 ரக தட்டைக் கணினிகளும், ஆப்பிள் பென்சில் என்ற எழுதுகோலுடன், நவீன அம்சங்கள் சிலவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.

மேம்படுத்தப்பட்ட புகைப்படக் கருவியையும் ஐபேட் ஏர் கொண்டிருக்கும்.