Home Featured உலகம் முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன் காலமானார்!

599
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகனின் மனைவி, நான்சி ரீகன் தனது 94வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

1981 முதல் 1989 வரை அமெரிக்க அதிபராக ரீகன் பதவி வகித்த காலத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உலகை வலம் வந்து அனைவரையும் கவர்ந்தவர் நான்சி ரீகன்.

ronald-nancy-reagan-முன்னாள் அதிபர் அமரர் ரோனால்ட் ரீகனும் – அவரது மனைவி நான்சி ரீகனும்…

#TamilSchoolmychoice

இவர் ஒரு முன்னாள் நடிகையுமாவார். ரீகன் அரசியலில் நுழைவதற்கு முன்பாக நடிகராக இருந்தபோது அவரைக் காதலித்து மணந்து கொண்டவர்.

இரண்டு தவணைகள் அதிபராக இருந்த ரீகன் இன்றுவரை அமெரிக்காவின் பிரபலமான அதிபர்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவராகத் திகழ்கின்றார். ரீகனின் அரசியல் வாழ்க்கையைச் செதுக்கியதிலும், அவர் சிறந்த அதிபர்களில் ஒருவராக உருவானதற்கும் பின்னணி சக்தியாக நான்சி ரீகன் இருந்தார் என்று அமெரிக்கா ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

ரீகன் அல்சைமர் எனப்படும் மறதி நோயினால் தனது கணவர் ரீகன் பீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நோய்க்கு எதிரான போராட்டத்திலும், அந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நான்சி பாடுபட்டு வந்தார். அவரது அந்த சேவைகளை நினைவு கூர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டில் ரோனால்ட் ரீகன் காலமானார்.