Home Featured உலகம் வரலாறு காணாத மழையால் துபாயில் வெள்ளம்!

வரலாறு காணாத மழையால் துபாயில் வெள்ளம்!

683
0
SHARE
Ad

dubaiதுபாய் – துபாயில் வரலாறு காணாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் நகர் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டன.

Dubai heavy rainமணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. நேற்று மட்டும் 250 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும் இதில் பொதுமக்கள் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அபுதாபி விமான நிலையம் 3 மணி நேரம் வரை மூடப்பட்டது.

Dubai heavy rain(c)பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, பங்குச்சந்தைகளும் இயங்கவில்லை. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கின்றது. வருடத்திற்கு சராசரியாக 78 மிமீ., மழை பதிவாகும், அங்கு நேற்று மட்டும் 290 மிமீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.