ஜெனீவா – போர்க்குற்றத்திற்கான ஆவணங்களை அழிப்பது, போர்க்குற்றம் சாட்டப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுவதாக ஐ.நா. சபை கூட்டத்தில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமை குழு கூட்டத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ஐ.நா. சபையின் கண்கானிப்பு குழுவை சேர்ந்த சட்ட வல்லுநர்கள் பீட்டர் கெய்ன்ஸ் இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக கருத்துக்களை ஐ.நா. விசாரனை குழுவிடம் தெரிவிக்க கூடாது என்று அவர்கள் மிரட்டப்படுவதாக அவர் தெரிவித்தார். போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருவது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது,
பாதிக்கப்பட்ட தமிழர்களை தொடர்ந்து மிரட்டி வருவது, போர்க்குற்றத்திற்கான ஆவணங்களை அழிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுவதாகவும் பீட்டர் கெய்ன்ஸ் கூறினார்.
வரும் ஜுன் மாதம் ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தொடங்கும் முன் இலங்கை அரசு ஐ.நா.வின் பரிந்துரைகளை செயல்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.