புதுமுக இயக்குநர் பழநி இயக்கவிருக்கும் படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, இளவரசு ஆகியோர் நடிக்கவிருக்கும் படம் “ சங்கிலி புங்கிலி கதவ தொற”. பிரபலமான பாடல் வரிகளே ஜீவா, அட்லீ படத்தின் தலைப்பு. அட்லீயின் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ-ஃபார் ஆப்பிள்’ (‘A For apple’) தான் இப்படத்தைத் தயாரிக்கிறது.
மேலும் , அட்லீ சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாவது படமே விஜய் படமாக அமைந்ததால் அட்லீயைப் பார்த்து ஆச்சரியப்பட்ட திரையுலகம், இரண்டாவது படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அவதாரம் எடுக்கவிருப்பதை எண்ணி மேலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறது சினிமா உலகம்.