Home Featured தமிழ் நாடு அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்: தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்!

அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்: தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்!

1149
0
SHARE
Ad

admkசென்னை – அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள, பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது,

#TamilSchoolmychoice

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக்  கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், கொங்கு பேரவை கட்சி தனியரசு, சரத்குமார் கட்சியில் இருந்து பிரிந்த எர்ணாவூர் நாராயணன், ஆகியோர், ஜெயலலிதாவுடன் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மக்களிடம் செய்யவுள்ள  பிரச்சார வியூகம், மற்றும் தொகுதிப்  பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலர் தேவராஜன், “தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக ஜெ அரசு உள்ளது.

மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பணியில் எங்கள் கட்சியின் குழு செயல்படும். வரும் தேர்தலில் கூடுதல் சீட் வழங்க வேண்டும் என ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.