Home Featured உலகம் 50 ஆண்டுகளில் மியன்மாரின் இராணுவம் சாராத முதல் அதிபர் தேர்வு!

50 ஆண்டுகளில் மியன்மாரின் இராணுவம் சாராத முதல் அதிபர் தேர்வு!

630
0
SHARE
Ad

யாங்கோன் – மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கீயின் நெருங்கிய அரசியல் ஆலோசகர்களில் ஒருவரான ஹித்தின் கியாவ் நேற்று நாடாளுமன்ற வாக்கெடுப்பின் வழி மியன்மாரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 50 ஆண்டுகளில் இராணுவ ஆதரவு இல்லாமல், பொதுமக்களிடையே ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது மியன்மாரில் இதுவே முதன் முறையாகும்.

Myanmar's NLD picks presidential nomineesஹித்தின் கியாவ் – மியன்மாரின் புதிய அதிபர்….

#TamilSchoolmychoice

மியன்மாரின் முந்தைய இராணுவ அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டவர்தான் தற்போது புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹித்தின். இவர் நாடாளுமன்றத்தில் 360 வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.

2010ஆம் ஆண்டில் ஆங் சூ கீ வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அவருடன் போராட்டத்தில் இணைந்தார் ஹித்தின்.

1960ஆம் ஆண்டுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய மியன்மார் இராணுவம் அப்போது முதல் இரும்புக் கரம் கொண்டு அந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய அதிபரின் பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கும்.

வாக்கெடுப்புக்குப் பின்னர் “இது மக்களின் வெற்றி” எனத் தனது தேர்வை ஹித்தின் வர்ணித்துள்ளார்.

69 வயதான ஹித்தின், ஆங் சூ கீ தலைமையிலான நேஷனல் லீக் ஃபோர் டெமோக்ரசி என்ற கட்சியின் நீண்ட கால உறுப்பினராவார். ஹித்தின் கியாவ் மியன்மாரின் பிரபல கவிஞர் ஒருவரின் புதல்வராவார்.

கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தேர்தலிலும் நேஷனல் லீக் கட்சி அபரிதமான வெற்றியைப் பெற்றது.