முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக பந்து வீசியதன் காரணமாக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து, 10 விக்கெட்டுகளையும் இழந்தபோது, 126 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், 127 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா நம்பிக்கையுடன் களமிறங்கியது.
ஆனால், முதல் சில பந்துகளிலேயே விக்கெட்டுகளையும், தனது முக்கிய ஆட்டக்காரர்களையும் இந்தியா இழந்தது.
18.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 79 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 47 ஓட்டங்கள் (ரன்கள்) வித்தியாசத்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்திடம் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டுள்ளது.