Home Featured கலையுலகம் சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் நீக்கம் இல்லை – விஷால் விளக்கம்

சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் நீக்கம் இல்லை – விஷால் விளக்கம்

746
0
SHARE
Ad

சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை சங்கத்தின்  பொதுச் செயலாளரான விஷால் மறுத்துள்ளார்.

vishalsarath_2394632fஅவர்கள்  நீக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மாறாக, இப்போதைக்கு அவர்களிடம் து விளக்கம் மட்டுமே கேட்கப்பட உள்ளது என விஷால் கூறியுள்ளார்.

சரத்குமார் தலைமையிலான முந்தைய நிர்வாகத்தினர் இன்னும் கணக்கு வழக்குகளையும், சில ஆவணங்களையும் ஒப்படைக்காத காரணத்தால், அவர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் அந்த மூவரையும் நீக்குவது குறித்து விவாதிக்கப்பட்டாலும், இப்போதைக்கு அவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் மட்டுமே அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்த பிறகே நீக்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் விஷால் கூறியுள்ளார்.