Home Featured கலையுலகம் ஆபாச பாடல் வழக்கு: மே 12 -ம் தேதி கோவை நீதிமன்றத்தில் அனிருத் ஆஜராக உத்தரவு!

ஆபாச பாடல் வழக்கு: மே 12 -ம் தேதி கோவை நீதிமன்றத்தில் அனிருத் ஆஜராக உத்தரவு!

656
0
SHARE
Ad

aniகோவை – ஆபாச பாடல் வழக்கு விசாரணைக்காக இசையமைப்பாளர் அனிருத் வரும் மே 12-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும், என கோவை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (41). கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர். இவர், பெண்களை அவமதிக்கும் வகையில் ‘பீப்’ பாடல் பாடிய சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஜனவரி 20-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், மார்ச் 21-ஆம் தேதி (நேற்று) சிம்பு, அனிருத் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, கோவை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை ரத்துசெய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மனுதாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆபாச பாடல் தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் விசாரணையின்போது நேரில் ஆஜராக அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் கோவை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆபாச பாடல் வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

அப்போது  சிம்பு ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் நகலை அவரது வழக்கறிஞர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். விசாரணையை மே.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அப்போது இசையமைப்பாளர் அனிருத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.