பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 2–ஆவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இதற்கு முன்பு 2012–ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றி இருந்தது.
20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.23.2 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2–ஆவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.9.94 கோடி கிடைத்தது.
அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.4.9 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2014–ஆம் ஆண்டு உலக கோப்பையில் வழங்கிய பரிசு தொகையில் இருந்து இது 80 சதவீதம் கூடுதலாகும்.