இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இறுதிப் போட்டியில் 85 ரன்கள் குவித்த சாமுவெல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் தனது பேட்டிங் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 23, பாக்கிஸ்தானுக்கு எதிராக 55 (நாட் அவுட்), வங்காதேசத்திற்கு எதிராக 24, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 82 (நாட் அவுட்) மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 89 (நாட் அவுட்) என இந்திய அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments