Home Featured நாடு எம்எச்370: மொரீசியசில் கிடைத்துள்ள விமானத்தின் ‘உள்பாகத்தை’ ஆய்வு செய்ய ஏற்பாடு!

எம்எச்370: மொரீசியசில் கிடைத்துள்ள விமானத்தின் ‘உள்பாகத்தை’ ஆய்வு செய்ய ஏற்பாடு!

504
0
SHARE
Ad

kabinmh370கோலாலம்பூர் – மொரீசியஸ் தீவில் சுற்றுலாப் பயணிகளால் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாகம் எம்எச்370 விமானத்தின் வர்த்தக வகுப்பு அல்லது சிக்கன வகுப்பின் உள்பாகமாக (Interior) இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அந்த சந்தேகத்திற்குரிய பாகம் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகம் தான் என்பது உறுதியாகும் பட்சத்தில், அது தான் எம்எச்370 தேடுதலில் கிடைத்திருக்கும் விமானத்தின் முதல் உள்பாகம் ஆகும்.

#TamilSchoolmychoice

“மலேசிய அரசாங்கம் தற்போது மொரீசியஸ் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பாகம் ஆய்வுக்கு உட்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்று ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சர் டேரென் செஸ்டர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மொசாம்பிக் தீவில் கிடைத்துள்ள இரண்டு பாகங்களும் கிட்டத்தட்ட எம்எச்370-ன் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய பாகம் கிடைத்துள்ளது விசாரணையில் மேலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விரைவில் விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் டேரென் செஸ்டர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.