Home Featured தமிழ் நாடு திமுகதான் பேரம் பேசியது – வைகோ மீண்டும் சர்ச்சை!

திமுகதான் பேரம் பேசியது – வைகோ மீண்டும் சர்ச்சை!

515
0
SHARE
Ad

vijayakanth-karuna-vaikoசென்னை – “தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரம் பேசவில்லை. கொடுப்பதற்குத்தான் திமுக முன் வந்தது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வைகோ நேற்று அளித்த பேட்டியில், “விஜயகாந்த் ஊழல் செய்பவராக இருந்தால், இத்தனை கோடி பணம் பேரம் பேசப்பட்டது என்று அத்தனை பத்திரிகைகளிலும் எழுதப்பட்டிருக்கும். பணம் பேசப்பட்டது, தொகுதி கொடுப்போம் என்று சொல்லப்பட்டது”.

“இது உண்மை. திரும்பவும் சொல்கிறேன், இன்னொரு வழக்குகூட போடட்டும். ஆனால் அதை நிராகரிக்க கூடிய துணிச்சல் இருக்கிறதே, அந்த நேர்மை அவரிடம் ( விஜயகாந்த்) இருக்கிறது. பேரம் அவர்கள் (தேமுதிக) பேசவில்லை. கொடுப்பதற்கு அவர்கள் (திமுக) முன் வந்தார்கள் என்று எனக்கு தெரியும்”.

#TamilSchoolmychoice

“அந்த மாதிரியான ஆசாபாசங்களுக்கு விஜயகாந்த் இடம் கொடுக்கவில்லை. ஆகவே, இது திமுகவை தூக்கி பிடிக்க நினைக்கிறவர்களுடைய முயற்சி. நாங்கள் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்” என்று கூறி வைகோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.