ரியாத் – சவுதி அரேபியாவுக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த விருதை சவுதி மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் வழங்கி கௌரவித்துள்ளார்.
நவீன சவுதி நாட்டை நிர்மாணித்த அப்துல் அசிஸ் அல் சவுட் பெயரில் இந்த விருது வழங்கப்படுகின்றது.
சவுதி அரண்மனையில் மோடியுடனான சந்திப்பு, பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சவுதி மன்னர் இந்த விருதை மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
வழங்கப்பட்ட விருதுடன் மோடி…
இதற்கு முன்னர், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், எகிப்திய அதிபர் அப்துல் பாட்டா எல்-சிசி போன்ற உலகத் தலைவர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இப்போது அந்த வரிசையில் மோடியும் இடம் பெற்றுள்ளார்.