கடந்த மார்ச் 26-ம் தேதி, மலேசிய எல்லையில் பிலிப்பைன்சின் அபு சயாப் இயக்கத்தினரால், தைவான் படகு ஒன்று கடத்தப்பட்டது.
அதிலிருந்த 10 இந்தோனேசியப் பணியாளர்களை சிறைபிடித்த தீவிரவாதிகள், அவர்களின் படகை அப்படியே கடலில் விட்டுச் சென்றனர்.
இந்நிலையில், அப்படகு இழுத்துச் சென்ற 7000 டன் நிலக்கரி மிதவையையும் தற்போது அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதனிடையே, கடத்தி வைக்கப்பட்டுள்ள பணியாளர்களை விடுவிக்க, அபு சயாப் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கேட்பதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்: MMEA
Comments