Home Featured நாடு மிட்வேலி உணவுக்கடையில் வெடி விபத்து: 8 பேர் காயம்!

மிட்வேலி உணவுக்கடையில் வெடி விபத்து: 8 பேர் காயம்!

542
0
SHARE
Ad

Midvalleyகோலாலம்பூர் – இன்று காலை தலைநகரிலுள்ள மிட்வேலி வணிக வளாகத்தில், உணவகம் ஒன்றில் வாயுக்கசிவினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 காயமடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில், அந்த உணவகத்தின் மேற்கூரையில் ஒருபகுதி பலத்த சேதமடைந்திருப்பதாகவும், இரண்டு பேருக்கு தீக்காயங்களும், 6 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

சமயலுக்காக அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த திரவ பெட்ரோலியம் வாயு அமைப்பில் நேற்று தான் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றதாகவும், வாயுக் கசிவே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.