Home Featured நாடு சிப்பாங் எம்பி ஹானிபாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சிப்பாங் எம்பி ஹானிபாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

610
0
SHARE
Ad

hanipa maidinகோலாலம்பூர் – சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடினுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் மருத்துவமனையிலுள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமனா பேஸ்புக் பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நேற்று நாடாளுமன்றத்தில், ஹானிபா தனது இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்ட ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு ஆகிய இருவரும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.