கோலாலம்பூர் – ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் வெளியாகியுள்ள மலேசியர்களின் பெயர்களை ஆய்வு செய்து, அவர்கள் ஏன் வெளிநாட்டில் பணம் வைத்துள்ளனர் என்பதைக் கண்டறியுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா.
நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் இதை அரசாங்கத்திடம் விட்டுவிடுவோம். ஆனால் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இதை விசாரணை செய்து கண்டறிந்தே ஆக வேண்டும்” என்று துங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் யாரையும் தற்காக்கவில்லை. சட்டத்தை மீறினால் நான் உட்பட யாராக இருந்தால் வருவதை அனுபவிக்கத் தான் வேண்டும்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துங்கு ரசாலி தெரிவித்துள்ளார்.