Home Featured இந்தியா இந்தியாவிலேயே அதிவேக ரயில் சேவை தொடக்கம்! (காணொளியுடன்)

இந்தியாவிலேயே அதிவேக ரயில் சேவை தொடக்கம்! (காணொளியுடன்)

685
0
SHARE
Ad

India's Fastest Train Gatimaan Expressடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லி – ஆக்ரா இடையேயான அதிவேக கதிமன் விரைவு ரயில்சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று  தொடங்கி வைத்தார். மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இந்த  கதிமன் ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிவேக ரயிலாக இதுவரை சதாப்தி எக்பிரஸ் விரைவு ரயில் இருந்து வருகிறது. இதனை மிஞ்சும் வகையில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகம் செல்லும் கதிமன் ரயில் முழுவதுமாக இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் குறிப்பாக  டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களில் இருமார்க்கமாகவும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ரயில் சேவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். முதல் ரயில் இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டது.

வார நாட்களில் காலை 8.10 மணிக்கு நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் ஆக்ராவை காலை 9.50 மணிக்கு சென்றடையும்.  இதே போன்ற அதிவேக ரயில், டெல்லி மட்டுமின்றி வேறு சில மார்க்கங்களிலும் விரைவில் இயக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது.