பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிபா மைடின் ஆகிய இருவருமே அந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
நாடாளுமன்ற நடைமுறைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பொய் கூறினாலோ, தவறான தகவல்களை வழங்கினாலோ அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிற்கு தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்க முடியும்.
அந்த நடைமுறைக்கேற்ப கடந்த ஜூலை 26-ஆம் தேதி அவசர கால சட்டம் குறித்து தக்கியூடின் ஹாசான் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அவர் தவறான முறையில் நாடாளுமன்றத்தை வழி நடத்தினார் என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவசர காலம் தொடர்பிலான 6 சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், இன்று காலையில் தங்களின் தீர்மானம் குறித்து விவாதிக்க அவர்கள் கோரிக்கை விடுத்தபோது அவையை நடத்திக் கொண்டிருந்த துணை அவைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹஸ்னோன் இந்த விவகாரம் குறித்து அவைத் தலைவர் அசார் அசிசானே முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.