Home Featured கலையுலகம் பனாமா ஆவணங்களுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – நடிகர் அமிதாப்பச்சன் மறுப்பு!

பனாமா ஆவணங்களுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – நடிகர் அமிதாப்பச்சன் மறுப்பு!

548
0
SHARE
Ad

amitabh bachchanமும்பை – பனாமா ரகசிய ஆவணங்களில் வெளியான வெளிநாட்டு நிறுவனங்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் அமிதாப்பச்சன் மறுத்துள்ளார். மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் மொசாக் போன்செகா என்ற சட்ட நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் தனிநபர்கள், நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை, வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொடர்பு மற்றும் ரகசிய வங்கிக் கணக்குகள் குறித்த தகவல் திரட்டியது.

இந்த ஆவணங்களை அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 100 செய்தியாளர்கள் ‘‘பனாமா ஆவணங்கள்’’ என்ற பெயரில் கடந்த வாரம் கசிய விட்டனர்.

இதில் ரஷிய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளர்கள், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி, ஆலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

#TamilSchoolmychoice

இந்தியாவில் இருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500 பெயர்களும் இடம்பிடித்து இருந்தன. அமிதாப்பச்சன் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்த பணத்தை, பனாமா உள்ளிட்ட சில நாடுகளின் நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதை அமிதாப்பச்சன் நேற்று மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– ஆவணங்களில் வெளியாகியுள்ள பல்க் ஷிப்பிங் நிறுவனம், லேடி ஷிப்பிங், டிரஷர் ஷிப்பிங், டிராம் ஷிப்பிங் என்ற நிறுவனகள் எதையும் எனக்கு தெரியாது.

இந்த நிறுவனகளுடன் எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. இந்த நிறுவனகளில் ஒருபோதும் நான் இயக்குனராக இருந்ததும் கிடையாது. இதில் எனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் நான் செலவு செய்த பணம் அனைத்துக்கும் முறைப்படி வரி செலுத்தி இருக்கிறேன்.

இதேபோல் வெளிநாட்டுக்கு அனுப்பிய பணத்துக்கும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் சட்டத்துக்கு உட்பட்டு வரியை செலுத்தி உள்ளேன். அதேநேரம் இந்த ஆவணத்தில் எனது தரப்பில் சட்டவிரோதமாக எந்த வித தவறும் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை என நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.