மாட்ரிடில் – மோசமான வானிலையால் மீன் பிடிக்கச் சென்ற போது, திமிங்கலத்திற்கு உணவான ஸ்பெயின் மீனவர், 3 தினங்களுக்குப் பின் திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் (56). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றார். அப்போது மோசமான வானிலை காரணமாக அவரது படகு கடலில் மூழ்கியது. இதனால், ராட்சத திமிங்கலம் ஒன்றிற்கு உணவானார் லுயிகி.
அந்த திமிங்கலம் அவரை அப்படியே விழுங்கியது. இதனால் வயிற்றிற்குள் சென்ற லுயிகி, திமிங்கலத்தின் கழிவுகளைச் சாப்பிட்டபடி மூன்று நாட்கள் உள்ளேயே இருந்துள்ளார். இதற்கிடையே மாயமான லுயிகியை கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடியுள்ளனர்.
ஆனால், அவரைக் கண்டுபிடிக்க இயலாததால் அவர் இறந்து விட்டதாக அவர்கள் முடிவு செய்தனர். இந்த சூழ்நிலையில், திமிங்கலத்தின் கழிவுகளில் இருந்து லுயிகி மயங்கிய நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உரிய சிகிச்சைகளுக்குப் பின் மயக்கம் தெளிந்த லுயிகி, ‘கிட்டத்தட்ட 72 மணி தான் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்ததாக’த் தெரிவித்துள்ளார். மேலும், “நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன்.
எனது கைகடிகாரத்தின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான். எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார். நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன். இப்போது நான் மீண்டுள்ளேன்’ என அவர் ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார்.