Home Featured தமிழ் நாடு தேமுதிக கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை – ஸ்டாலின்!

தேமுதிக கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை – ஸ்டாலின்!

672
0
SHARE
Ad

stalinசென்னை – தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும் நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளையும் உடனடியாக நியமனம் செய்துள்ளார் விஜயகாந்த். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தேமுதிக அதிருப்தியாளர்கள் நீக்கப்பட்டது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நானோ, திமுகவோ தலையிட விரும்பவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து திமுக மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறார். அதற்காக நான் கவலைப்படவில்லை.”

#TamilSchoolmychoice

மூன்று நாட்களுக்குள் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும். அதேபோல் திமுக போட்டியிடும் தொகுதிகளை கட்சித் தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்றார் ஸ்டாலின்.