கோலாலம்பூர் – விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது குறித்து விசாரணை நடத்துவதாக ஏர் ஆசியா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது குறித்து மலேசியாகினி இணையதளத்திற்கு ஏர் ஆசியா நிறுவனம் விடுத்துள்ள தகவலில், “அந்தப் பயணி சம்பந்தப்பட்ட பொருளை (பல்லி இருந்த நாசி லெமா பொட்டலம்) எங்களிடம் ஒப்படைக்காதது குறித்து வருந்துகின்றோம். அப்படிச் செய்திருந்தால் உடனடியாக விசாரணை நடத்தி (பல்லி) எப்படி வந்தது என்று கண்டறிந்திருப்போம்”
“என்றாலும் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, எழுந்திருக்கும் புகார் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விசாரணைக்குப் பின்னரே இதில் ஏதேனும் விஷமத்தனம் நடந்திருக்கின்றதா? என்பதைக் கண்டறிந்து உறுதியாகச் சொல்ல முடியும்” என்று ஏர் ஆசியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.