Home Featured இந்தியா பனாமா பேப்பர்ஸ் பற்றி மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!

பனாமா பேப்பர்ஸ் பற்றி மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!

631
0
SHARE
Ad

rahul-gandhi-modi9-600அசாம் – அசாமில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கமல்பூர் என்ற இடத்தில் நடந்த பொது கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

“வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என பெரிய வாக்குறுதிகள் எல்லாம் பிரதமர் மோடி அளித்தார்”.

“ஆனால் ஒருவர் கணக்கில் கூட ரூ.15 லட்சம் வரவில்லை. தற்போது பனாமா பேப்பர்ஸ் பட்டியலிலும் ஏராளமான இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சட்டீஸ்கர் முதல்வரின் மகன் அபிஷேக் சிங்கின் பெயரும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது”.

#TamilSchoolmychoice

“இது குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்பதை பிரதமர் மோடி கூறவேண்டும். ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை ஏன் இந்தியா அழைத்து வரப்படவில்லை என நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன்”.

“அதற்கு பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பதில் அளிக்கவில்லை. விஜய்மல்லைய்யா வெளிநாடு தப்பிச்செல்லும் முன் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்துவிட்டுதான் சென்றார். பணத்தை கொள்ளையடித்த லலித்மோடியும், நாட்டை விட்டு வெளியில் உள்ளார்”.

“கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டுள்ளது. ‘பேர் அன்ட் லவ்லி’ திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் கொண்டு வந்தார்”.

“இதன் மூலம் கொள்ளையர்கள், போதை கடத்தல் ஆசாமிகள் கூட குறைந்தபட்ச வரியை செலுத்திவிட்டு தங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியும்” என ராகுல் காந்தி பேசினார்.