Home Featured தமிழ் நாடு சென்னையிலிருந்து இன்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா!

சென்னையிலிருந்து இன்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா!

536
0
SHARE
Ad

jayalalitha-campaign5778சென்னை – அதிமுக வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தலை விட மிகக் குறைந்த இடங்களில்தான் அவர் பேசப் போகிறார் என்றாலும் கூட மக்களைக் கவரும் வகையில் அவரது பிரச்சாரத் திட்டம் வகுக்கப்படடுள்ளதாம்.

இன்று சென்னை தீவுத் திடலில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். அப்போது சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பார்.