Home Featured வணிகம் புரோட்டோன் கார் நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.5 பில்லியன் நிதி உதவி!

புரோட்டோன் கார் நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.5 பில்லியன் நிதி உதவி!

610
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் நிறுவனத்திற்கு அரசாங்கம் 1.5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்திற்கான உபரிப் பாகங்களை விநியோகிக்கும் வணிக நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பாக்கிப் பணத்தைச் செலுத்துவதற்காகவும், நிதிக் கையிருப்பு பற்றாக் குறையால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் புரோட்டோன் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காகவும் இந்த உதவிநிதி வழங்கப்படுகின்றது.

Proton-Logoஅதே சமயத்தில் இந்நிறுவனம் மறு சீரமைப்புத் திட்டம் ஒன்றைத் தயாரித்து முன்வைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. போட்டித் தன்மையை அதிகரிக்க வேண்டும், வணிக வியூகங்களை வகுக்க வேண்டும் எனவும் புரோட்டோனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் தனது பதவி விலகலை அறிவித்த 8 நாட்களுக்குள் இந்த மாற்றங்கள் அந்நிறுவனத்தில் அரங்கேறியுள்ளன.

#TamilSchoolmychoice

அனைத்துல வாணிப, தொழில்துறை அமைச்சர் முஸ்தபா முகமட் புரோட்டோனுக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் இலகுவான கடன் வசதியாக வழங்கப்படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

தனது வணிகத்தை விரிவாக்குவதற்காகவும், மேன்மைப்படுத்துவதற்காகவும், புரோட்டோன் அனைத்துலக அளவில் ஒரு புதிய வணிகப் பங்காளியை அடையாளம் காண வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புரோட்டோன் மற்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடவும் அனைத்துலக அரங்கில் வெற்றி பெறவும் முடியும் என நம்பப்படுகின்றது.

புரோட்டோனின் உருமாற்றத்தைக் கண்காணிக்க முன்னாள் அமைச்சரும், ‘பெமாண்டு’ (Pemandu) எனப்படும் அரசாங்க இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரியுமான இட்ரிஸ் ஜாலா-வை அரசாங்கம் நியமித்துள்ளது.