Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடக்கினார்!

ஜெயலலிதா தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடக்கினார்!

693
0
SHARE
Ad

சென்னை – இன்று முதல் பிரம்மாண்டமான முறையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருக்கும் வேளையில் அவர் போட்டியிடவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத் தொடக்கினார்.

stalinவெள்ளத்தின்போது, தனது தொகுதியையும், பாதிக்கப்பட்ட சென்னை மக்களையும் வந்து சந்திக்காத முதலமைச்சரின் தொகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்த ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார்.

இருப்பினும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று சனிக்கிழமை முதல் 234 தொகுதிகளிலும் அதிமுக அரசின் குறைகளை எடுத்துக் கூறும் வண்ணம் தங்களின் பிரச்சாரங்கள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.