அதன்படி, தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து குஷ்புவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் போட்டியிட போவதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
தற்போது இந்த தேர்தலிலும் மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் பரவி இருக்கிறது. அது உண்மை இல்லை. நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை’ என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
Comments