Home Featured நாடு மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: ஒரு வரிச் செய்திகள்!

589
0
SHARE
Ad

 

Selliyal Oruvari seithigal

  • பெங்காலான் செப்பா: கிளந்தான் மாநிலத்தின் பெங்காலான் செப்பா நகரில் அமைந்திருக்கும் பெங்காலான் செப்பா 2 இடைநிலைப் பள்ளியில், அங்குள்ள மாணவர்கள் ஆவி உருவங்களைப் பார்த்தனர் என்றும், ஹிஸ்டீரியா போன்ற உடல்நலக் குறைவு அவர்களுக்கு ஏற்படுகின்றது என்றும் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது.
  • சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடி வந்த, கெடா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் கனி யாக்கோப் கொல்லப்பட்டிருக்கலாம் என உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இதுவரையில் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் போராட்டத்தால் மரணமடைந்த மலேசியர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
  • இப்போது கைது செய்தால், சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படலாம் என்பதால், சரவாக் தேர்தலுக்குப் பின்னர் துன் மகாதீர் கைது செய்யப்படலாம் என முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
  • அதிகரித்து வரும் வெப்ப சூழ்நிலை ஒருபுறம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளை ஆரோக்கியமற்ற காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது.
  • முன்னாள் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் பண இருட்டடிப்பு (Money Laundering) மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு, கணவன்-மனைவி ஜோடி ஒன்றும் மற்றொரு குத்தகையாளரும் 17 மில்லியன் ரிங்கிட் வரை பண இருட்டடிப்பு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.