Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன்!

ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன்!

727
0
SHARE
Ad

vashanthi devi, jayalalithaaசென்னை – மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டப் பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கல்வியாளர் வசந்திதேவியை மக்கள் நலக் கூட்டணியின் பொது வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுத்தியுள்ளது.

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அந்தக் கட்சி ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

thiruma-vasanthideviஇந்த நிலையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டுமன்னார்கோவிலில் அவரே போட்டியிடுவதையும், ஆர்.கே.நகர் தொகுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி போட்டியிடுவதையும் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணியின் முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் எனது வேண்டுகோளை ஏற்று துணைவேந்தர் வசந்திதேவி தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டார் என்றார் திருமாவளவன்.