Home Featured தமிழ் நாடு தமிழக சட்டமன்றத் தேர்தல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகளில்!

666
0
SHARE
Ad

Karunanidhi and Jayalalithaa - PTI_0_0

  • காங்கிரசைச் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞர் மு.கருணாநிதியை மரியாதை நிமித்தம் இன்று சந்தித்தார். குஷ்பு முன்பு திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • திமுக தலைவர் கருணாநிதியின் ஜாதியைக் குறிக்கும் வண்ணம் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கடுமையாக விமர்சனம் செய்த வைகோவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
  • ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக இணைந்த கூட்டணியின் பொது வேட்பாளராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி போட்டியிடுகின்றார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக, மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவார்.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டு மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றார். இது அவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்ற சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதியாகும்.
  • சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, ஜெயலலிதா பிரச்சாரம்.
  • இன்றைய சேலம் மாவட்டப் பிரச்சாரத்தின்போது கேரளா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
  • ஜெயலலிதாவின் சேலம் மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில், உடல் நலக் குறைவால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர்.