Home Featured தமிழ் நாடு சேலத்திலும் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் 2 பேர் பலி! 40 பேர் மயக்கம்!

சேலத்திலும் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் 2 பேர் பலி! 40 பேர் மயக்கம்!

690
0
SHARE
Ad

jaya_viruthachalam_2811110fசேலம் – சேலம் அருகே நேற்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தனர். 40 பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்துள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாசலத்தில் கடந்த வாரம் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது, வெயில் கொடுமையால் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு, இழப்பீடு வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறினார்.

மேலும், அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் ஜெயலலிதா கூறினார். இந்நிலையில், சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் நேற்று நடந்த, மேற்கு மண்டலம் மற்றும் கேரள அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

இதற்காக காலை 11 மணிக்கெல்லாம் மாநாட்டு பகுதியில் அதிமுக தொண்டர்கள் உட்கார வைக்கப்பட்டனர். 4 மணிக்கு ஜெயலலிதா உரையாற்றினார். ஆனால், அதுவரை, வெயிலில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கத்தால், அதிமுக தொண்டர் பச்சையண்ணன் சுருண்டு விழுந்தார்.

அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியில் பச்சையண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரியசாமி என்பவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

மேலும் 40 பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல தரப்பட்ட தலைவர்களும் கண்டித்துள்ளனர்.