Home Featured கலையுலகம் நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல் – திரை உலகில் பரபரப்பு!

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல் – திரை உலகில் பரபரப்பு!

671
0
SHARE
Ad

simbuசென்னை – நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது: பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது.

ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை. சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் மனவேதனைக்கு ஆளாக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் கடிதத்தை 22-ஆம் தேதி அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் இந்த முடிவு, திரைஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.