சென்னை – முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேர்தலுக்கும் முன்பே வெளியாகக் கூடும் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் இந்த தீர்ப்பு மே 16-ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலையளித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்த விசாரணை நேற்று நடைபெற்றது. கர்நாடக தரப்பு தன்னுடைய வாதத்தை முன் வைத்தது.
பின்னர், ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், சசிகலா, ஜெயலலிதாவின் அதிகார மையமாக இருந்தது கிடையாது. சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை.
மேலும், ஜெயலலிதா-சசிகலா இடையே பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிய நிலையில், ஜெயலலிதாவும்-சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக சொத்து குவித்தார்கள் என்று கூற முடியாது என தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், இதுகுறித்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீர்ப்பு இன்னும் குறுகிய காலத்தில் வழங்கப்பட்டவுள்ளதாகவும். வரும் மே 16 தீர்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நிலையில், இந்த செய்தி அதிமுக மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.