Home Featured வணிகம் முல்லெரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு – கவலையில் கசானா நேஷனல்!

முல்லெரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு – கவலையில் கசானா நேஷனல்!

1179
0
SHARE
Ad

MAS CEO Christoph R Muellerகோலாலம்பூர் -மலேசியா ஏர்லைன்ஸ் தலைமைச் செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டோபர் முல்லெரின் திடீர் பதவி விலகல் அறிவிப்பு, தேசிய விமான நிறுவனம் அதன் தலைமை நிறுவனத்தைக் கவலையடையச் செய்துள்ளது.

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய அதன் தலைமை நிறுவனமான கசானா நேஷனல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் யாவும் இதனால் பாதிப்படையும் என்று மலேசிய வர்த்தக சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“முல்லெருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்த கசானா நேஷனல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் அதற்கு சில காலம் எடுக்கும்” என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்கிழமை, திடீர் அறிவிப்பை வெளியிட்ட முல்லெர், தனது மூன்று வருட ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்கு முன்பே, வரும் செப்டம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் அகமட் ஜாவ்ஹாரி யாஹ்யா பதவி விலகியவுடன், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டார் முல்லெர்.

தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்சை நிர்வகிக்க பதவியில் அமர்த்தப்பட்ட முதல் வெளிநாட்டவர் கிறிஸ்டோபர் முல்லெர் என்பது குறிப்பிடத்தக்கது.