சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, அவரது இல்லத்தில் குஷ்பு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
ஆட்சியின்போது மதுவிலக்கு பற்றிய அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடாதது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பினார். மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றிய எதிர்பார்ப்பு தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
Comments