Home Featured நாடு மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

மலேசியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

623
0
SHARE
Ad

Zetiகோலாலம்பூர்:அரசாங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை மேலும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், பொதுமக்களுக்கு,  1எம்டிபி ஊழல்கள் குறித்தும், பிரதமருக்கு வழங்கப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடைகள் குறித்தும் விளக்கம் தரப்பட வேண்டும் என மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா) கவர்னர் டான்ஸ்ரீ சேத்தி (படம்)  வலியுறுத்து!

கோலாலம்பூர்: மெக்காவில் இராட்சத பளுதூக்கி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த மலேசியர்களில் மேலும் இருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என பிரதமர் துறை துணையமைச்சர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர்: படுகொலை செய்யப்பட்ட அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்சின் நல்லுடலை நாளை புதன்கிழமை அவரது குடும்பத்தினர், கோலாலம்பூர் பொது மருத்துவமனையிலிருந்து பெற்றுக் கொள்வர்

#TamilSchoolmychoice

கோலாலம்பூர்: மலேசியக் காவல் துறையின் சிறப்புப் பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) கைது செய்திருக்கும் இருவர் பேங்காக் எரவான் கோயில் வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கலாம் என சந்தேகம்!

கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் பரவியுள்ள ‘ரேபிஸ்’ எனப்படும் நாய்களினால் ஏற்படும் நோயைக் கட்டுப்படுத்த, 5 இலட்சம் தடுப்பூசி மருந்துகளை கால்நடை இலாகா வரவழைத்துள்ளது.