Home கலை உலகம் பிரபல மலையாளப் பின்னணிப் பாடகி ராதிகா திலக் புற்றுநோயால் மரணம்!

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகி ராதிகா திலக் புற்றுநோயால் மரணம்!

590
0
SHARE
Ad

radhika-600x300கொச்சி – கேரளத் திரைப்பட உலகின் பிரபல பின்னணிப் பாடகியான ராதிகா திலக் புற்றுநோயால் காலமானார்.

45 வயதான இவர், கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர்.1991-ஆம் ஆண்டு ஒற்றையால் பட்டாளம்என்ற மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானர். இதுவரை 70க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் பாடியுள்ளார்.

அவரது கணவர் சுரேஷ், ஒரு தொழில் அதிபர். அவர்களுக்குத் தேவிகா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவருக்குப் புற்று நோய் இருப்பது கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு தெரிய வந்தது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனே அவர் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு மலையாளத் திரையுலகினர் திரணடு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை அவரது உடல் கொச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.