புதுடில்லி – டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலால் டில்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
டெங்குக் கொசுக்களை அழிக்க டில்லி மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில்,டெங்குக் காய்ச்சல் போதாதென்று தற்போது அங்கு பன்றிக்காய்ச்சல் எனப்படும் ஸ்வைன் ப்ளூ பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகின்ற காரணத்தினால், டில்லியிலிருந்து சென்னைக்கு வருகின்ற பயணிகளுக்குச் சென்னை ரயில் நிலையங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
டெங்குக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் விதமாகச் சுகாதாரத் துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.