Home இந்தியா கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: அடுத்த மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

564
0
SHARE
Ad

12-1434081679-kalanithi-maran--s-600புதுடில்லி – ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதிமாறன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு, நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத் தலைவராகக் கலாநிதி மாறன் இருந்தபோது, ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த சுமார் 146.5 கோடி ரூபாயைச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் சார்பில் டில்லி நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமென்று டெல்லி நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்குத் தடை விதிக்கக் கோரி, கலாநிதிமாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதனை ஏற்றுக் கொண்ட  நீதிமன்றம், கலாநிதிமாறன் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது.

இந்நிலையில் வரி ஏய்ப்பு வழக்கு மனு இன்று விசாரணைக்கு வந்தது.அவ்விசாரணையின் போது, இம்முறை நீதிமன்ற நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கலாநிதிமாறன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும்,இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.