Home One Line P2 விஜய்யின் அடுத்த படம் – சன் பிக்சர்ஸ் தயாரிப்பு; “கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கம்!

விஜய்யின் அடுத்த படம் – சன் பிக்சர்ஸ் தயாரிப்பு; “கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கம்!

746
0
SHARE
Ad

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் “மாஸ்டர்” திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர் விஜய் இரசிகர்கள்.

மலேசியாவிலும் எதிர்வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மலேசியாவிலும் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

விஜய்யின் அடுத்த 65-வது படம் எது என்ற கேள்வி தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. விஜய்யும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டிருந்தாலும், யாருக்கும் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டு வந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டுள்ளார். அந்தப் படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ளது.

நெல்சன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் “டாக்டர்” என்ற திரைப்படத்தை முடித்து விட்டு இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

சிறந்த நகைச்சுவைப் படமாக கோலமாவு கோகிலாவைத் தந்திருப்பதால் நெல்சன்-விஜய் இணையும் படத்திலும் நகைச்சுவைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ்-விஜய் இணையும் தளபதி -65 பிரம்மாண்ட தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சன் பிக்சர்ஸ் அதன் உரிமையாளர் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் இணைந்து தோன்றும் காணொலி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அந்தக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: