Home One Line P2 டாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

டாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

984
0
SHARE
Ad
படம்: நன்றி சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம்

சென்னை: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயந்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது, நெல்சனின் இயக்கத்தில் நடிகர்  சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் படமான டாக்டர்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக தெலுங்கு திரைப்பட நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.  மேலும், வினய் ராய், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இப்படம், வருகிற 2020-ஆம் ஆண்டின் இடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.