Home One Line P2 குறிப்பிட்ட ஜிஎஸ்சி திரையரங்குகள் டிசம்பர் 16 முதல் திறக்கப்படும்

குறிப்பிட்ட ஜிஎஸ்சி திரையரங்குகள் டிசம்பர் 16 முதல் திறக்கப்படும்

673
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் பல மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீக்கியதன் மூலம், ஜிஎஸ்சி தனது திரையரங்குகளை டிசம்பர் 16- ஆம் தேதி மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இது ஹாலிவுட் திரைப்படமான வோண்டர் வுமன் 1984 வெளியீட்டிற்கான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெடா, பினாங்கு, மலாக்கா, புத்ராஜெயா, பகாங் மற்றும் சரவாக் ஆகிய 9 இடங்களில் உள்ள அதன் திரையரங்குகள் டிசம்பர் 16- ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் திறந்திருக்கும் என்று ஜிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பட்டியல் மாற்றத்திற்கு உட்பட்டது என்று. அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, கோலாலம்பூர், சபா மற்றும் சிலாங்கூரில் டிசம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இருப்பவர்களுக்கு, அலமண்டாவில் மட்டுமே திரையரங்கு திறக்கப்படுகிறது.

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், கொவிட்-19 இன் பரவலைக் குறைக்க கூடல் இடைவெளி போன்ற திரையரங்குகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று அது கூறியுள்ளது.

இதனிடையே, ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படமும் மலேசியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜிஎஸ்சி முன்னர் குறிப்பிட்டது போல, அப்போதைய நிலவரம் பொருத்து இதற்கான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.