ஹைதரபாத்: 450- க்கும் மேற்பட்டோர் இந்திய மாநிலமான ஆந்திராவில் மர்ம நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மரணமுற்றுள்ளார்.
வார இறுதியில், எலுரு என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலிப்பு மற்றும் குமட்டலை எதிர்க்கொண்டனர். மேலும், சிலர் வாயில் நுரைத்ததாக கூறப்படுகிறது.
அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
455 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் 200 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டோலா ஜோஷி ராய் தெரிவித்தார். திங்களன்று ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி, மருத்துவமனையில் நோயாளிகளை பார்வையிட்டார்.
இந்த மர்ம பாதிப்பு ஆந்திராவில் சுகாதார அமைப்பின் சுமையை அதிகரித்துள்ளது. அங்கு தற்போது 800,000 கொவிட்-19 கொவிட்-19 தொற்று பதிவுசெய்யப்படுள்ளது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக வல்லுநர்கள் மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நோய்க்கான காரணத்தைத் தீர்மானிக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவு அல்லது நீர் மாசுபடுதல் அல்லது விஷம் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்காலம் என்ற சாத்தியங்களை அவர்கள் ஆராய்கிறார்கள்.