Home Featured நாடு கெடா மாநில இளவரசி காலமானார்!

கெடா மாநில இளவரசி காலமானார்!

658
0
SHARE
Ad

RajaMudaofKedah2109newஅலோர்ஸ்டார் – கெடா மாநில இளவரசர் துங்கு அப்துல் மாலிக் இப்னி சுல்தான் பாட்லிஷாவின் மனைவியான கெடா மாநில இளவரசி தெங்கு ராவுட்சா சுல்தான் ஹிஷாமுடின் பாலிட்ஷா இன்று காலை 10 மணியளவில் அலோர் ஸ்டார் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் காலமானார்.

இதனையடுத்து, மறைந்த இளவரசியாருக்கு இறுதி மரியாதை செலுத்த அலோர்ஸ்டாருக்கு மேன்மை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலீம் முவாட்சாம் ஷாவும், பேரரசியாரும் கெடா புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும் ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1956-ம் ஆண்டு துங்கு அப்துல் மாலிக்கை திருமணம் செய்த தெங்கு ராவுட்சா  சுல்தான் இஷாமுடின், அதன் பின்னர் 1981 – ம் ஆண்டு நடைபெற்ற முடிசூட்டு விழாவிற்குப் பின் கெடா மாநில இளவரசியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இளவரசர் துங்கு அப்துல் மாலிக் இப்னி சுல்தான் பாட்லிஷா, மேன்மை தங்கிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலீம் முவாட்சாம் ஷாவின் சகோதரர் ஆவார்.

இளவரசியாரின் மறைவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கெடா மாநில அரசு வெளியிடும் என்று கூறப்படுகின்றது.