சென்னை ஆழ்வார்பேட்டையில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபு, விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், திரை உலகத்தில் பிலிம் நியூஸ் அனந்தனின் உழைப்பு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்தார். பல லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அவர் சேர்த்து வைத்த தகவல்களை மீண்டும் பெற முடியாது.
ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரைபோல் வரவேண்டும் என்றும், அவரிடமிருந்து பத்திரிகைகள் வாங்கிய சிறு, சிறு தகவல்களை எல்லாம் திருப்பி தந்தால் அவர் சேகரித்த பொக்கிஷங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கமலஹாசன் பேசிய காணொளி: