Home Featured நாடு இந்திரா காந்தி வழக்கு: ரிடுவான் அப்துல்லா தாய்லாந்துக்கு தப்பி ஓடத் திட்டமா?

இந்திரா காந்தி வழக்கு: ரிடுவான் அப்துல்லா தாய்லாந்துக்கு தப்பி ஓடத் திட்டமா?

1237
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முஸ்லீம் மதத்துக்கு மாறிய தன் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபனைக் கைது செய்ய கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆணை விடுத்துள்ளதைத் தொடர்ந்து அவர் தனது கடைசி மகள் பிரசன்னா டிக்சாவுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்யலாம் என்றும் அதற்கு முன்பாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்திரா காந்தி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரிடுவான் அப்துல்லா தாய்லாந்துக்கு தப்பி ஓட முயற்சி செய்யலாம் தன தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டுள்ளன.

Indira Gandhi-Kulasegaran-ஏப்ரல் 29ஆம் தேதி கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வரலாற்றுபூர்வ  தீர்ப்புக்குப் பின்னர் இந்திரா காந்தி, தனது வழக்கறிஞர் குலசேகரனுடன்…..

#TamilSchoolmychoice

41 வயதான இந்திரா காந்தி காவல் துறையில் புகார் செய்யும்போது அவரது  வழக்கறிஞரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரனும் உடனிருந்தார்.

“ரிடுவான் கடைசியாக கிளந்தான் தலைநகர் கோத்தா பாருவில் தங்கியிருந்தார். அவர் இன்னும் அதே கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி வருகின்றார். அதில் இருந்துதான் எனக்குத் தொந்தரவு கொடுக்கும் குறுஞ் செய்திகளை அனுப்பி வந்தார். அவர் வெளிநாட்டுக்கு எனது மகளுடன் தப்பி ஓடத்  திட்டமிடுகின்றார். எனவே, குடிநுழைவுத் துறையும், காவல் துறையும் அதற்கு முன்பாக அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும்”  என இந்திரா காந்தி தாங்கள் தொடர்பு கொண்டபோது தெரிவித்ததாக, மலாய் மெயில் இணையப் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

தங்களின் திருமணம் முடிந்த பின்னரும்கூட ரிடுவான் அடிக்கடி தாய்லாந்து சென்று வருவார் என்பதால், அவர் தனது மகளுடன் தாய்லாந்து செல்லும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ள இந்திரா காந்தி, தனது மகளை காப்பாற்றுமாறு குடிநுழைவுத் துறையையும், காவல் துறையையும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த குலசேகரன் ரிடுவான் அப்துல்லாவைக் கைது செய்ய ஐஜிபி தனிப் படை அமைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.